ஆப்நகரம்

“டேஸ்டி ஹோட்டல்” சாம்பாரில் எலி, 3ஆவது முறை இது: என்ன செய்ய போறீங்க ஆஃபிசர்ஸ்?

கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டல் பார்சல் பொட்டலத்தில் சாம்பாருடன் சேர்த்து எலி கிடந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Samayam Tamil 22 Nov 2020, 2:19 pm
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி, எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்டபோது அதில் எலி கிடந்துள்ளது. இதன் காரணமாக நோயாளியின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Samayam Tamil “டேஸ்டி ஹோட்டல்” சாம்பாரில் எலி, 3ஆவது முறை இது: என்ன செய்ய போறீங்க ஆஃபிசர்ஸ்?
“டேஸ்டி ஹோட்டல்” சாம்பாரில் எலி, 3ஆவது முறை இது: என்ன செய்ய போறீங்க ஆஃபிசர்ஸ்?


கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள டேஸ்டி என்ற தனியார் ஹோட்டலில் வாங்கியே இட்லி சாம்பாரில் எலி இருந்ததால் நோயாளி குடும்பத்தார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளி குடும்பத்தார் கடைக்குத் திரும்பிச் சென்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து கடை உரிமையாளர் லாவகமாக எலியிருந்த சாம்பாரைக் கடைக்குள் எடுத்துச்சென்று ஷட்டரை மூடிக் கொண்டார்.

பிச்சை பெண்கள் உங்க வீட்டையும் நோட்டமிடலாம்... உஷார் மக்களே!

இதனிடையே அந்த கடை வாசலில் பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மீண்டும் ஹோட்டல் கடையைத் திறந்து வியாபாரத்தை உரிமையாளர் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் இதுவரை மூன்று முறை இம்மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி