ஆப்நகரம்

கார் திருடன் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை தாக்கிய கோவை மக்கள்!

கோவையில் கார் திருட முயன்றதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2021, 4:24 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்த சுரேஷ் குமார் என்பவரின் காரை, ஒரு வாலிபர் கம்பியை கொண்டு திருட முயன்றுள்ளார். இதனை கண்ட காரின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.
Samayam Tamil கோயம்புத்தூர்


மேலும், போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வருவதற்குள் அந்த வாலிபர் கைகட்டுகளை அகற்ற முயற்சி செய்த நிலையில் காலையும் கட்டி வைத்தனர்.

அங்கு வந்த காவல்துறையினர் விசாரிக்கும் போது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவர அவரை பிடித்த பொதுமக்களே அவருக்கு உணவு குடிநீர் ஆகியவை வாங்கி கொடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி