ஆப்நகரம்

கல்லூரியில் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே என்னை இடைநீக்கம் செய்தனர்: கோவை மாணவி பிரியா!

கல்லூரியில் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே என் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கோவை மாணவி பிரியா கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Apr 2018, 5:19 pm
கல்லூரியில் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே என் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கோவை மாணவி பிரியா கூறியுள்ளார்.
Samayam Tamil priya_cbe_11350


கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி பிரியா. இவர் சமீபத்தில் கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமையைபற்றி கருத்து தெரிவித்ததனால் கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ‘பேராசியர் பியூலா, அவர்களது வகுப்பின்போது பேச்சுத்திறனை வளர்க்க ஏதேனும் ஒரு தலைப்பில் பேசச் சொல்வார்கள். அப்போதுதான் கத்துவா சிறுமியின் பாலியல் வன்கொடுமை பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டும் என்பது பற்றியும் பேசினேன். அப்போது வகுப்புக்கு வந்த ஒரு ஆசிரியர் இது நமக்கு தேவையில்லாத விஷயம் என்றார். மேலும் சில மாணவர்களும் எதிர்த்தனர். நான் எனது கருத்தை மட்டும்தான் சொன்னேன் என்று கூறினேன்.

ஒரு சில மாணவர்கள் என்மீது புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் என்னை இடைநீக்கம் செய்ததாகவும் கூறினார்கள். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எனது பெயரை நோட்டீஸ் போர்டில் ஒட்டினர். அதில் எவ்வளவு நாள் வரை இடைநீக்கம் என்றுகூட குறுப்பிடவில்லை. மேலும் அடுத்த மாதம் 14ம் தேதிதேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கு ஹால்டிக்கெட்எப்போது கொடுப்பார்கள் என்றுகூட தெரியவில்லை. மேலும் என்னைஇடைநீக்கம் செய்ததுதொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வருகின்ற விழாயக்கிழமை விசாரணை செய்ய உள்ளது. அவர்களிடம் நடந்ததை தெளிவாக கூறுவேன். மேலும் எனக்கு துணையாக 21 மாணவர்கள் உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சட்டக்கல்லூரியில் அரசியல் பேசக்கூடாதுஎன்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கல்லூரியில் அரசியல் பேசுபவர்களை அச்சுறுத்தவே இதுபோன்று கல்லூரி நிர்வாகம் நடந்துகொள்கிறது என்று மாணவி பிரியா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி