ஆப்நகரம்

கோவை மக்களே உஷார், அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்: அடக்கம் செய்யும் பணியில் தமுமுக!

கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தமுமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 7 May 2021, 11:25 pm
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியதிலிருந்து நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை தமுமுகவால் அவரவரின் மதநம்பிக்கை அடிப்படையில் 150 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil கோவை மக்களே உஷார், அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்: அடக்கம் செய்யும் பணியில் தமுமுக!


இந்தநிலையில் மீண்டும் கடந்த சில வாரங்களாகத் தொற்றின் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கோவை மாவட்ட தமுமுகவினர் மீண்டும் நல்லடக்கம் செய்யும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்படியிருக்க கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களைக் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் நேற்று நல்லடக்கம் செய்தனர்.

கொரோனா வரமாயிருக்கப் பத்மாசனம் பண்ணுங்க: கோவை மாஸ்டர் அறிவுரை!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமுமுக மருத்துவ சேவை அணி என்றும் தயாராக உள்ளது என்றும் உதவி தேவைப்படுபவர்கள் எந்த தயக்கமுமின்றி தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி