ஆப்நகரம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோவையில் களமிறங்கிய வேளாண் வல்லுநர்கள்!

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 30 Nov 2020, 1:48 pm
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்துவதற்காகத் தலைநகரை நோக்கி விவசாயிகள் படையெடுக்கின்றனர்.
Samayam Tamil டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோவையிலும் போராட்டம்!
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகக் கோவையிலும் போராட்டம்!


இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு அடையாளமாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு. பழனிசாமி தலைமையில் புதிய வேளாண் மசோதாவைத் திரும்பப் பெறவலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

பெரியார் சிலைகளை அகற்ற இந்து அமைப்பு கோவையில் தீர்மானம்!

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைகளில் தென்னங்கன்று, வாழை, மா கன்று என விவசாய பயிர் செடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி