ஆப்நகரம்

சாலை விரிவாக்கம் செய்ய கோவை சிறுவாணி சாலையில் 86 மரங்கள் வெட்ட முடிவு

கோவை சிறுவணி சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரிபகுதியாக சாலையோரம், உள்ள 86 மரங்கள் வெட்டப்பட உள்ளன. மரங்களை மதிப்பிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Apr 2018, 5:49 pm
கோவை சிறுவணி சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரிபகுதியாக சாலையோரம், உள்ள 86 மரங்கள்வெட்டப்பட உள்ளன.மரங்களை மதிப்பிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil 640px-Quite_Road_Coimbatore


கோவை மாவட்டம் சிறுவாணி, வெள்ளிங்கிரி, ஈஷா யோகா மையம், சாடியல் ,கோவைக்குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல சிறுவாணி சாலையேபிரதான வழித்தடமாகஉள்ளது.சுற்றுலாபயணிகளும், விஜபிக்களும் அதிகளவில் வந்து செல்வதால் இந்த சாலை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாகன எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ,சாலையை அகலப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுபாட்டில் இருந்தாலும், தேசிய நிதி ஒதுக்கீட்டிலிருந்து , ரூ16 ,கொடி பெற்று, 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக சாலையை அகலப்படுத்தி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காளம்பாளையத்தில் இருந்து இருட்டுப்பள்ளம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கஅதிக வாகனங்கள் பயணிக்க ஏதுவாக இந்த விரிவாக்கப் பணி நடைபெற்றது வருகிறது.

சாலையில் இருபுறங்களிலும் தலா ஒன்றரை மீட்டர் வரை அகல்ப்படுத்தப்படுவதால்80-க்கும் மேற்பட்ட மரங்கள்வெட்டப்பட உள்ளதாகவனத்துறையினர் கூறுகின்றனர்.

எப்போதும் நிழல்படர்ந்து , குளிர்ச்சியான சூழலைத்தரும் சிறுவாணி சாலை, மரங்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். சாத்தியமுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தமல்,மறுநடவு செய்ய வேண்டும் , சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பரமாரிக்க வேண்டுமென சுழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி