ஆப்நகரம்

நீலகிரி மழை: கொரோனா வார்டில் விழுந்த மரம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி நோயாளிகள்

நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் அதிகப்படியாக அவலாஞ்சியில் 39 சென்டி மீட்டர் மழையும், மேல் பவானி 30 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Samayam Tamil 5 Aug 2020, 5:35 pm
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தலைமை மருத்துவமனையின் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வரும் கொரோனா வார்ட்டின் மீது கனமழை காரணமாக மரம் விழுந்தது. இதில் நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Samayam Tamil tree fall down on corona ward due to rainfall in nilgris
நீலகிரி மழை: கொரோனா வார்டில் விழுந்த மரம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி நோயாளிகள்


நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக உதகை, கூடலூர், அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், தேவலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் அதிகப்படியாக அவலாஞ்சியில் 39 சென்டி மீட்டர் மழையும், மேல் பவானி 30 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலை மற்றும் அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இரவு மற்றும் பகல் நேரங்கள் என மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.



இந்நிலையில், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கொரோனா வார்டின் மீது மரம் விழுந்தது. இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தை அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி