ஆப்நகரம்

பணம் எண்ணும் மெஷின்... வானதி சீனிவாசன் விளக்கம்!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் இருந்தது தொடர்பாக சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்துக்கும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Samayam Tamil 13 Sep 2021, 12:46 pm
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டபடி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களை சந்தித்து பேசினார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
Samayam Tamil வானதி சீனிவாசன் அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளது
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளது


இதன் பின்னர் காணொலி காட்சி மூலம் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது வானதி சீனிவாசனின் அருகில் பணம் எண்ணும் மெஷின் இருந்தது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலை தளங்களில் எழுந்தது. இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில் வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது:

ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தால் நண்பரின் அலுவலகத்தில் காணொலி கூட்டத்தில் கலந்துகொண்டேன். இது, எனது அலுவலகம் அல்ல. கவுண்டிங் மெஷின் இருந்ததும் எனக்கு தெரியாது.

அரசுக்கு குடைச்சல் தரவே..ஆளுநர்; மத்திய அரசு மீது பகீர் குற்றச்சாட்டு!

அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கின்றனர். இவ்வாறு வானதி சீனிவாசன் முகநூலில் பதிவு செய்து உள்ளார். வானதி சீனிவாசனின் இந்த முகநூல் பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி