ஆப்நகரம்

கோவை கலெக்டர் செய்த சிறப்பான சம்பவம்... குடிநீருக்காக இப்படி ஒரு செயல்!

வடகிழக்கு பருவமழைக்கு ஆயத்தமாகும் கோவை மாநகரம். களத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தீவிரம்.

Samayam Tamil 20 Sep 2021, 11:31 pm
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவையில் மாபெரும் தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை கலெக்டர் செய்த சிறப்பான சம்பவம்... குடிநீருக்காக இப்படி ஒரு செயல்!


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் தூய்மை பணி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கோவையிலும் மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகக் கோவையில் 50 கிமீ சுற்றளவுக்கு மாநகராட்சியின் 81ஆவது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களைத் தூய்மைப்படுத்தும் பணியைக் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் சுங்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த தூய்மை பணியானது இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த பணியில் ஆயிரத்து 500 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்த பணிகளைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் ஆயிரத்து 500 கிமீ கால்வாய்கள் உள்ளது. இன்று முதல் கட்டமாக 50 கிமீ தூர்வாரப்படும். இதில் ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் நீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்திய கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி