ஆப்நகரம்

கோவை கலெக்டர் அலுவலகத்தையும் விட்டுவைக்காத கொரோனா! கட்டடம் மூடல்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆட்சியர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் மாடி மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 2 Jun 2020, 6:06 pm
கோவைக்கு சென்னையிலிருந்து வந்த சிறைத்துறையைச் சேர்ந்த 50 வயதான பெண் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றி வந்த பழைய ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் முதல் மாடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை கலெக்டர் அலுவலகம்


மேலும், சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த மே 30ம் தேதி கோவை வந்தவர்களில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்திலும் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் - முதல்வர் பழனிசாமி

இதன் மூலம் கோவையில் தற்போது 9 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் நேற்று முதல் கோவையில் இருந்து காட்பாடிக்கும், மயிலாடுதுறைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று சற்று எட்டிப்பார்பது கோவையில் லேசான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி