ஆப்நகரம்

வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை!

ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 1:20 pm
ஜோலார்பேட்டை அருகே நூதன முறையில் வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை!
வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை!


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் பகுதியைச் சேர்ந்த முதியவர் கண்ணன். இவர் தனது மனைவி யசோதா(70) உடன் வசித்து வருகிறார். கண்ணன் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கண்ணனை பார்க்க தம்பதியரை போல வேடமிட்டு இருவர் பழம் கொண்டு வந்து மூதாட்டி யசோதாவிடம் கொடுத்துள்ளனர். பிறகு அவர் குளிக்கச் சென்றபோது பீரோவில் முதியவர் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும், அவருடைய மருமகளுக்கு சொந்தமான 10 சவரன் தங்க நகையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதத்தில் இது ஐந்தாவது திருட்டு இது எனவும், போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. ஆகவே இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி