ஆப்நகரம்

பள்ளி மாணவி காட்டுக்குள் வைத்து கூட்டு பலாத்காரம்... விழுப்புரத்தை புரட்டிப்போட்ட சம்பவம்

விழுப்புரம் அருகே காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது.

Samayam Tamil 26 Feb 2023, 6:47 pm
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அய்யங்கோயில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிந்தாமணியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil villupuram rape


இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர், மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சென்றுள்ளனர்.

கத்தி குத்தில் படுகாயமடைந்த சிறுவனும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் தற்போது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

மாணவி சத்யாவின் தாயும் மரணம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து பலி..!

காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமியான காதலியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரை பிடித்து வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி