ஆப்நகரம்

வீட்டுக்கு வந்து கதறி அழுத மாணவி... பின்னர் எடுத்த முடிவு... நெல்லையில் அதிர்ச்சி

திசையன்விளை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி வாழகியை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 May 2022, 5:21 pm
நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மாணவி ரம்யா (14). இவர் திசையன்விளை உடன்குடி ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தபோவனம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி ரம்யாவை தேர்வு எழுதும்போது அறையின் பொறுப்பு ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil nellai school student


இதனால் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி ரம்யா மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர் திட்டியதால் தான் அவமானப்பட்டதை தனது தாயிடம் சொல்லி அழுது "இனிமேல் பள்ளிக்கு போகமாட்டேன்" என கூறியதாக தெரிகிறது. மாணவியின் தாய் கலா மாணவியை சமாதானப் படுத்தியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து, மாணவியின் தந்தை வேலைக்கு சென்றுள்ளார். மாணவியின் அண்ணன் டியூசன் சென்றுள்ளார். மாணவியின் தாய் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவி ரம்யா தனி அறையில் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், மாணவியின் அண்ணன் சங்கர் டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது தனது தங்கை ரம்யா மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி அழுதுள்ளார். தனது தாயிடம் தங்கை இறந்த விபரத்தை கூறியுள்ளார். சம்பவம் குறித்து திசையன்விளை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் புதுப்பெண் தற்கொலை; கடலூரில் அதிர்ச்சி..!

தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி