ஆப்நகரம்

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம், அடைத்து வைத்து வன்கொடுமை..!

தெலங்கானாவில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்ட இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Jun 2020, 4:07 pm
தெலங்கானாவில் மேட்சல் தொகுதிக்குட்பட்ட காண்ட்லகோயா என்ற கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி 16 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் நடப்பதாக போலீசாருக்கு குழந்தைகள் மேம்பாட்டு சங்கத்தின் மூலமாக தகவல் கிடைத்தது.
Samayam Tamil minor girl marriage in telangana


சம்பவ இடத்துக்கு சென்ற மேட்சல் பகுதி போலீசார், சிவராத்திரி ஸ்ரீனு (21) என்பவர் 16 வயதான மைனர் சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர் முன்னிலையில் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதை உறுதி படுத்திக்கொண்டனர்.

இதுகுறித்து ஸ்ரீனு மற்றும் சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, '' மணமகனும், சிறுமியும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26 அன்று ஸ்ரீனு சிறுமியுடன் ஓடிப்போய் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவர் சிறுமியுடன் தனது கிராமமான குண்ட்லபொச்சம்பள்ளியில் தங்கி, சிறுமிக்கு மூன்று முறை உடலுறவில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.


இவர்களது திருமணத்தைப் பற்றி அறிந்ததும், சிறுமியின் பெற்றோர் குண்ட்லபொச்சம்பள்ளிக்கு வந்து, உறவினர்கள் முன்னிலையில் ஒரு முறையான திருமணத்தை நடத்துவதாகக் கூறி சிறுமியை மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சென்னையில் நாடக காதல்... வாழ்க்கையை தொலைத்த ஐ.டி.பெண் ஊழியர்..!

அதன் தொடர்ச்சியாக, ஜூன் 1ம் தேதி, இரு தரப்பினரின் பெற்றோர்களும் திருமணம் செய்துவைக்க சம்மதித்து காண்ட்லகோயா கிராமத்தின் முத்யலம்மா கோவிலில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அதையடுத்து சிவராத்திரி ஸ்ரீனு மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 376 ஏ (அனுமதியின்றி மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல்) மற்றும் 366 (ஒரு பெண்ணைக் கடத்தல் மற்றும் கட்டாய பாலியல்), ( POCSO) சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 இன் பிரிவு 9, 11, மற்றும் SC, ST (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டம் ஆகியவற்றின் கீழ் மேட்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி