ஆப்நகரம்

பப்ஜியில் தோற்றுப்போன விரக்தியில் 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு

பப்ஜி மொபைல் கேமில் தோல்வி அடைந்ததால் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 May 2019, 8:25 pm
பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகவுள்ளது. பொழுதுப்போக்கான விளையாட்டு தான் என்றாலும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன.
Samayam Tamil பப்ஜி விளையாட்டில் தோல்வி: 17 வயது  சிறுவன் மாரடைப்பால் பலி
பப்ஜி விளையாட்டில் தோல்வி: 17 வயது சிறுவன் மாரடைப்பால் பலி


இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதாக பல சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதை உறுதி செய்யும் விதமாக சில கல்லூரி விடுதிகளில் இந்த விளையாட்டை விளையாட கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பப்ஜி விளையாட்டை விளையாடியதால் சிலர் மூர்கமாக செயல்படுகின்றனர். இதுதொடர்பான செய்திகளும் அவ்வப்போது வெளிவருகின்றன. சிலர் இந்த விளையாட்டால் மரணத்தை சந்திக்கும் நிகழ்வுகள் கூட அரங்கேறி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃபர்கான் குரேஷி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட இவர், நேற்று மதியம் முழுவதும் சுமார் 6 மணிநேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார்.

அப்போது விளையாட்டில் அவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மிகுந்த விரக்தி அடைந்த மாணவர் சத்தம் போட்டு கத்தியாகத் தெரிகிறது. அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ஃபர்கான், எங்கள் மகன் ஒரு நீச்சல் வீரன். அவனுக்கு எப்படி மாரடைப்பு வந்தது என மருத்துவர்களிடம் கேட்டோம். பப்ஜி மீதான மோகம் அவனை சாகும் நிலைக்கு தள்ளிவிட்டது. இதை தடுக்க அரசு முயற்சிகள் செய்ய வேண்டும் என ஆதங்கத்துடன் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த செய்தி