ஆப்நகரம்

கடலூரில் பழைய குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலி: ஒருவருக்கு தீவிர சிகிச்சை

கைவிடப்பட்ட இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் ஆன்லைன் கேம் விளையாட சென்ற 2 சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு: ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதி.

Samayam Tamil 27 Jan 2022, 5:51 pm
கடலூர் மாவட்டம் வடக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக தன்னார்வலர்களால் குடியிருப்பு கட்டப்பட்டது. குடியிருப்பு தரம் இல்லாத காரணத்தினாலும் நகர் பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருந்ததாலும் இங்கு இலங்கை அகதிகள் யாரும் தங்கவில்லை.
Samayam Tamil கட்டடம் இடிந்து சிறுவர்கள் பலி


இதனால் அப்பகுதி புதர்மண்டி காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குடியிருப்புக்கு சென்று விளையாடுவது வழக்கம். அதே போன்று இன்று வெள்ளைகரைப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், வீரசேகர் மற்றும் பெரியார் சமத்துவபுரத்தை சேர்ந்த சுதீஷ்குமார் ஆகிய 3 பேரும் மொபைலில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென கட்டிடம் இடிந்து 3 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அவர்களை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வீரசேகர், சுதீஷ்குமார் ஆகிய இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் கணவன்... வீடியோ கால் பழக்கத்தால் கதறி உயிரைவிட்ட பெண்..! திருச்சி சோகம்

மேலும், இடிபாடுகளில் சிக்கிய புவனேஷ் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி