ஆப்நகரம்

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் ரேப்: கடலூரில் அடுத்த அதிர்ச்சி..!

விருதுநகர் பாலியல் சம்பவ வழக்கு தமிழகத்தை உலுக்கிய நிலையில் அதே போன்ற சம்பவம் கடலூரில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Samayam Tamil 29 Mar 2022, 1:00 pm
கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த 21 வயது இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil 21 year old woman sexually assaulted infront of boyfriend in cuddalore
காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் ரேப்: கடலூரில் அடுத்த அதிர்ச்சி..!


கூட்டு வன்கொடுமை

விருதுநகரில் இப்பெண்ணை மிரட்டி கூட்டு வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பள்ளி மாண்வர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பூதாகரமாகியது. இந்த நிலையில், கடலூரிலும் காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி காதலன் கண்முன்னே அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் கூறிய விஷயம்

கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நள்ளிரவில் 21 வயதான பெண் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் அந்த பெண்ணிடம் சென்று விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறிய விஷயம் போலீசாரை அதிர வைத்தது.

சுடுகாடு பகுதி

கடலூர் கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அவ்வழியே செல்வதற்கு தயங்குகின்றனர். இந்த சூழலில், மேற்கண்ட 21 வயதான இளம்பெண் தனது காதலனுடன் இங்குள்ள பழைய வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் இருவரையும் செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.

காதலனின் கண்முன்னே

பின்னர் காதலனின் கண்முன்னே இப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அதனை அடுத்து இருவரின் செல்போன்களை பறித்துக்கொண்டு விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர். நடந்த கொடுமையை நினைத்து அந்த பெண் கண்ணீருடன் தனியாக இருந்தபோதுதான் போலீஸ் அங்கு வந்துள்ளது.

இளம்பெண்ணை வீடியோ எடுத்து

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து காதலனிடம் விசாரணை மேற்கொண்டபோது, அந்த மூன்று வாலிபர்கள் யாரென்றே தெரியாது என அவர் கூறியுள்ளார். பின்னர் அங்க அடையாளங்களை வைத்து விசாரித்ததில், 21 வயது இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி