ஆப்நகரம்

'என் மகள் உனக்குத்தான் வா', நம்பிச் சென்ற வாலிபரை படுகொலை செய்த பெண்ணின் தந்தை

ஓசூர் அருகே மகளை காதலித்து வந்த வாலிபரை திட்டமிட்டு கொலை செய்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Mar 2021, 7:16 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கான்றப்பள்ளியைச் சேர்ந்தவர் நாராயண செட்டியார் (50). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நாராயண செட்டியார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூரு ஜேபி நகரில் காற்கறி கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அருகே பெங்களூரூவைச் சேர்ந்த வசந்த் (25) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
Samayam Tamil ஆணவப்படுகொலை


இந்நிலையில், வசந்துக்கும், நாராயண செட்டியாரின் இரண்டாவது மகள் சவுமியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர். இந்த விவகாரம் நாராயண செட்டியாருக்கு தெரிய வரவே பலமுறை வசந்தை கண்டித்துள்ளார். ஆனாலும் காதலை கைவிட மனமில்லாமல் வசந்த் சவுமியாவுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வசந்தை தொடர்பு கொண்ட நாராயண செட்டியார், உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி தனது கான்றப்பள்ளி கிராமத்துக்கு வரவழைத்தார். வசந்தும் அதன்படி அங்கு சென்றார். ஆனால், சவுமியா அங்கு இல்லை. இந்நிலையில், சுதாரித்துக்கொண்ட வசந்த் தப்பிக்க முயற்சிக்கவே நாராயண செட்டியார் அவரை கட்டை, கற்களால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

டிக்டாக் பிரபலம் தற்கொலை, அமைச்சர் ராஜினாமா, பரபரப்பில் மஹாராஷ்டிரா அரசியல்

இச்சம்பவம் அறிந்து வந்த ஓசூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வசந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரனையில் வசந்தை கொலை செய்தது தெரிய வந்ததும் நாராயண செட்டியாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டுளார்களா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மகளை திருமணம் செய்துவைக்க போவதாக வாலிபரை வரச்சொல்லி கொலை செய்த தந்தையின் செயல் ஓசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி