ஆப்நகரம்

200 நாட்களை தொட்ட பரந்தூர் போராட்டம்.. பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் கைது..!

பரந்தூரில் நடைபெறும் 200வது நாள் போராட்டத்தில் பங்கேற்க பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கைது

Samayam Tamil 11 Feb 2023, 2:53 pm
ஏகானபுரத்தில் நடைபெறும் 200வது நாள் போராட்டத்தில் பங்கேற்க பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஏகனாபுரம் நோக்கி செல்லும் போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்து மாகரல் காவல் நிலையத்திற்கு காலவர்கள் அழைத்து சென்று அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil parandur protest


சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது என மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கவுள்ளது.

இதனால், விளை நிலங்களுடன், குடியிருப்புகளும், நீர் நிலைகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தினந்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் தொடர்ந்து கடந்த 199வது நாட்களாக இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

போதையில் ஞாபகத்துக்கு வந்த நண்பனின் மனைவி.. முடிவில் நடந்த கொலை..! நெல்லை பகீர்

இந்நிலையில் இன்று 200வது நாளாக ஏகனாபுரத்திலுள்ள அம்பேத்கர் விளையாட்டு திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் இப்போராட்த்தில் பங்கேற்று அவர்களுக்கு தனது ஆதரவினை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.

மேலும் இப்போராட்டத்தில் சட்டம் ஒழுங்கினை பேணி காக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி