ஆப்நகரம்

கோவையில் முதலைக் கறி: வளைத்துப் பிடித்த வனத் துறை அதிகாரிகள்!

முதலைக் கறி சமைக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 12 Feb 2020, 11:11 am
வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவந்தும் அப்படியான குற்றங்கள் குறைந்தபாடில்லை.
Samayam Tamil கோவையில் முதலைக் கறி


வனவிலங்குகளை பிடித்து விற்பனை செய்தல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றிற்காக வேட்டையாடப்படுவது வழக்கமாக உள்ள காரணங்கள் ஆகும்.

கோவை மாவட்டம் சிறுமுகையில் முதலைக் கறி சாப்பிடுவதற்காக முதலையைப் பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!

நேற்று (பிப்ரவரி 11) காலை சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை சுற்றுக்குட்பட்ட சிறுமுகை பெரியூர் பகுதியில் முதலைக்கறி இருப்பதாக ரகசியத் தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சிறுமுகை வனச்சரக தனிப்பணி வனவர் தலைமையில் பெத்திக்குட்டை சுற்று வனக்காப்பாளர், வனக்காவலர் குழுவாக பெரியூர் பகுதியில் தணிக்கை செய்தனர்.

சிறார் ஆபாசப் படம்: வேட்டையில் சிக்கிய கருப்பு ஆடு - வச்சு செய்யும் நாமக்கல் போலீஸ்!

அப்போது ராஜன் என்ற பழனியப்பன், மாரியப்பன் ஆகியோர் முதலைக் குட்டியின் தோலை உரித்துக்கொண்டிருக்கையில் பிடிபட்டனர். வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது மாரியப்பன் தப்பியோடிய நிலையில் ராஜன் மட்டும் பிடிபட்டார்.

நீட்: 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட பாணியில் தேர்வெழுதிய 10 பேரின் ஃபோட்டோ ரிலீஸ்!!

அவரிடம் நடைபெற்ற விசாரணையில் முதலைக்குட்டி சிக்கிய நிலையில் அதை சமைத்து சாப்பிடுவதற்காக அதன் தோலை உரித்துக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அவரை கைது செய்ததோடு முதலைக் குட்டியையும் பிடித்தனர். தப்பியோடிய மாரியப்பனை வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி