ஆப்நகரம்

செல்ஃபோன் கடையில் திருடும் டிப்டாப் ஆசாமி : வைரலாகும் வீடியோ காட்சிகள்!!

கடையில் செல்ஃபோன் வாங்குவது போல, அதனை டிப்டாப் ஆசாமி நூதனமான திருடும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 24 Dec 2019, 1:01 am
செல்ஃபோன் இல்லாத நபர்களே நாட்டில் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு, இன்று ஏழை முதல் பணக்காரன் வரை, ஆறு வயது சிறுவன் முதல் அறுபது வயது கிழவன் வரை அனைவரின் கையிலும் மொபைல்ஃபோன் தவழ்கிறது.
Samayam Tamil செல்ஃபோன் கடையில் திருடும் டிப்டாப் ஆசாமி : வைராகும் வீடியோ காட்சிகள்!!


ஆரம்பத்தில் தொலைவில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற மட்டும் பயன்பட்டு வந்த செல்ஃபோன்கள், ஸ்மார்ட் மொபைல்களால் உருமாறியபின் இவற்றின் பயன்பாடு மொத்தமாக மாறியது.

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிக்க தினமும் ஜிபி கணக்கில் இலவச டேட்டாகளை வழங்கி வருவதால், அதனை பயன்படுத்தியே தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன் 24 மணிநேரமும் தங்களது மொபைல்ஃபோன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செல்ஃபோன் விற்பனை செய்யும் நிறுவனங்களும் கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என அவ்வப்போது ஆஃபரில் மொபைல்ஃபோன்களை விற்பனை செய்து வருகின்றன.

இதனால், குறைந்தபட்சம் ஆறு மாசத்துக்கு ஒரு முறையாவது புதிய மொபைல்ஃபோன் வாங்க வேண்டும் என்ற மோகம் மக்களை பிடித்து வாட்டுகின்றது.

பண வசதியுள்ளவர்கள் நினைத்த மாத்திரத்தில் புதுபுது செல்ஃபோன்களை வாங்குவதில் யாருக்கும் பிரச்சனை இல்லை.

ஆனால், புதிதாக ஃபோன் வாங்க வசதியில்லாதவர்களும் கடைகளில் திருடியாவது செல்ஃபோனை வாங்க வேண்டும் என்ற தவறான எண்ணத்துடன் செயல்படுவதுதான் பிரச்சனை. இதுபோன்றதொரு சம்பவம் பரமக்குடியில் நேற்று (திங்கள்கிழமை) அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள செல்ஃபோன் விற்பனை செய்யும் கடையில் இருந்து மொபைல்ஃபோன்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கடைக்கு டிப்டாப்பாக உடையணிந்து வந்த ஆசாமி ஒருவர், கடை ஊழியரிடம் செல்ஃபோன் குறித்து கேட்டுக் கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் ஒரு செல்ஃபோனை, பாக்ஸுடன் எடுத்து கையில் மறைத்து கொண்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

பட்டபகலில் செல்ஃபோனை திருடியவரை சிசிடிவி காட்சிகளை வைத்து, பரமக்குடி டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி