ஆப்நகரம்

கோடிக் கணக்கில் கடத்தல்... தமிழ்நாட்டைச் சேர்ந்த 25பேர் கைது...

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 26 Feb 2020, 10:40 am
ஆந்திராவில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 47 செம்மரக் கட்டைகளை 4 கார், ஒரு லாரியில் கடத்தி சென்ற 27 பேரை ஆந்திர வனத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
Samayam Tamil Untitled


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட வன அலுவலர் குரு பிரபாகர். ஆந்திர வனப்பகுதியில் சமீபத்தில் பெரிய கடத்தல் கும்பல் ஒன்றைக் கைது செய்தது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது


அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடப்பா மாவட்டம் காஜி பேட்டை மண்டலம் நாகசாமி பள்ளியில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டி ஒரு கும்பல் கடத்தி செல்ல இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியைச் சுற்றிவளைத்தனர்.

நம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி!

அப்போது செம்மரம் வெட்டிய ஒரு கும்பல் அந்த பகுதியில் அவற்றை லாரியில் ஏற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் கள்ளக்குறிச்சி , விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் மற்றும் பொதட்டூர் ஒய்.எம்.ஆர். காலணியைச் சேர்ந்த மல்லேஷ், கடப்பா மாவட்டம் மைதுக்கூரை சேர்ந்த சுப்பாராயுடு ஆகியோரை மடக்கி கைது செய்து 4 கார்கள், ஒரு லாரி, 47 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கடத்தலில் சர்வதேச கடத்தல்காரன் அப்பாஷ், பொதட்டூரை சேர்ந்த மேலும் 3 பேருக்குத் தொடர்பு இருப்பது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது .அவர்களையும் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 18 இளைஞர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்..! மதுரையில் அதிர்ச்சி...

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு இளைஞர்கள் செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது போன்ற இளைஞர்களுக்குக் கலந்தாய்வு செய்து அவர்கள் செம்மர கடத்தலுக்காக ஆந்திராவிற்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி