ஆப்நகரம்

2 வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கல, இளம்பெண்ணின் விவாகரத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம்..!

அரபு நாட்டில் திருமணம் நடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகும் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாததால் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்.

Samayam Tamil 17 Oct 2020, 10:13 pm
பொதுவாக கணவனின் சித்திரவதை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களுக்கு பெண்கள் விவாகரத்து கோருவது வழக்கம். ஆனால், விருந்து நிகழ்ச்சி வைக்கவில்லை உள்ளிட்ட சில சாதாரண காரணத்தினால் பந்தா மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil file pic


அரபு நாட்டைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமண வரதட்சணையாக அந்த நபர் மணப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 19,99,564 ரூபாயை கொடுத்துள்ளார். மணப்பெண் பணக்கார வீட்டு பெண் என்பதால் திருமணத்தின் போது அவர் அணிந்திருந்த கவுனின் விலை மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 39,99,128 ரூபாய் என கூறப்படுகிறது.

மணப்பெண்ணை விட குறைந்த வசதி பெற்ற அந்த நபர் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வசிக்க சொந்த வீடுகூட இல்லாமல் இருந்துள்ளார். அதனால் மணப்பெண்ணின் தாயார் அவர்களது மற்றொரு வீட்டை கொடுத்தபோதும், வாழ்ந்தால் சொந்த வீட்டில்தான் வாழ்வேன் என தன்னம்பிக்கையோடு அந்த வீட்டை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.

துபாயில் இருந்து வந்த கணவன், மனைவியால் மனம் நொந்து தற்கொலை! தேனி துயரம்

திருமணம் செய்துகொண்ட பின்னர் இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனி அறையில் உறங்கி வந்துள்ளனர். என்னடா திருமணம் இது என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா? சரி மீதமுள்ள கதைக்கு செல்வோம். திருமணம் முடிந்த பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல், திருமண விருந்தை பிரமாண்டமாக நடத்தவேண்டும் என அந்த பெண் காத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், கணவனிடம் போதிய வருமானம் இல்லாததால் இரண்டு ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியை நடத்த இயலவில்லை. மேலும், திருமணமான நாளிலிருந்து ஒருமாதம் கூட அந்த நபர் மனைவியிடம் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் போதும் பொறுத்தது என்று நினைத்த அந்த பெண் அபுதாபி உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்தை ஏற்றதோடு, திருமணத்தின்போது அந்த வாலிபர் கொடுத்த ஒரு லட்சம் திரஹமில் 80 ஆயிரம் திர்ஹமை வழங்கவேண்டும் என்றும், அதுபோல் மணப்பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் திர்ஹமை கொடுக்கவும் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி