ஆப்நகரம்

அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு பிடி வாரண்ட்..! நீதிமன்றம் அதிரடி

மாமல்லபுரம் வன்முறை வழக்கில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடிவாரண்ட்

Samayam Tamil 20 Apr 2021, 2:31 pm
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அப்போது பாமகவை சார்ந்தவர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil pmk violence


செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணையில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, ஜி.கே மணி, கணேசன், அரசகுமார், நாகராஜ் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு வீடியோ கால், நள்ளிரவு சேட்டிங்... நடிகர் டேனி மீது பரபரப்பு புகார்..!

மாமல்லபுரத்தில் பாமக நடத்திய விழாவில் தலித் மக்களையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் பாமக நிர்வாகிகள் இழிவாக பேசியவதாகவும், வன்னிய இளைஞர்களுக்கு சாதிவெறியை தூண்டியதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன.

அந்த பிரச்சாரத்தால் மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வன்முறையில் இறங்க வழி வகுத்ததாகவும் கூறப்பட்டது.

அடுத்த செய்தி