ஆப்நகரம்

அயனாவரம் பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும் வரை சிறை..! 15 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு...

அயனாவரம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2020, 4:33 pm
தமிழகத்தை அதிரச் செய்த அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் சென்னை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018 ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்த வந்த மாற்றுத்திறனாளி சிறுமி (காது கேட்கும் திறன் குறைபாடு கொண்டவர்) 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil அயனாவரம் பாலியல் வழக்கு


இந்த நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வரும் போது லிப்ட் ஊழியர் அச்சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதையடுத்து குடியிருப்பு காவலாளி, பிளம்பர், தண்ணீர் கேன் சப்ளை செய்தவர் என அந்த சிறுமியை 7 மாதங்காளாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த குற்ற வழக்கில் மொத்தம் 17 பேரை போலீசார் சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 2019 இல் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. எனினும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சிறையிலிருந்த பாபு என்ற குற்றவாளி காசநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பர் குத்திக் கொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு...

எஞ்சியிருந்த 16 பேர் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மஞ்சுளா விசாரித்த வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடந்த இறுதி விசாரணையில் 16 குற்றவாளிகளில் ஒருவரான தோட்டக்காரர் குணசேகரனை வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம், 15 பேரை குற்றவாளி என அறிவித்தது.

இதையடுத்து தீர்ப்பு விவரங்களை வரும் 3ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார். இந்நிலையில் இன்று சிறுமி வழக்கில் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் ' குற்றவாளிகளில் 4 பேரான ரவிக்குமார், சுரேஷ், ராஜா, குமரன் ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒருவருக்கு வழக்கமான ஆயுள் தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஒருத்தருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளின் பெயர் விவரம் :

A1) ரவிகுமார்(56) சாகும்வரை ஆயுள்
A2) சுரேஷ்(32) சாகும் வரை ஆயுள்
A3) ராஜசேகர்(48) ஆயுள்
A4) எரால்பிராஸ்(58) 7ஆண்டு
A5) அபிஷேக் (28) சாகும் வரை ஆயுள்
A6) சுகுமாரன் (60)5 ஆண்டு
A7) முருகேசன்(54) 5 ஆண்டு
8) பரமசிவம் (60) 5 ஆண்டு
A9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு
A10) பாபு(36) இறந்துவிட்டார்
A11) பழனி(40) சாகும் வரை ஆயுள்
A12) தீனதயாளன்(50) 5 ஆண்டு
A13) ராஜா (32) 5 ஆண்டு
A14) சூர்யா(23) 5 ஆண்டு
A15) குணசேகரன்(55) விடுதலை
A16) ஜெயராமன்(26) 5 ஆண்டு
A17) உமாபதி(42) 5 ஆண்டு

அடுத்த செய்தி