ஆப்நகரம்

பாஸ் போர்ட் ரெடி..! வேலைக்கு அழைப்பு... டிக்டாக்கினால் பலியாகிய வாலிபர்..!

உத்தரப் பிரதேசத்தில் நண்பர்களுடன் டிக்டாக் எடுக்க எடுத்துக்கொண்டிருந்த வாலிபர் பாறையில் குதித்து பலியாகியுள்ள சம்பவம் வாலிபரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 12 Jun 2020, 2:18 pm
கத்தியின்றி, ரத்தமின்றி பலபேரது வாழ்க்கையையும், மானத்தையும் காற்றில் பறக்கவிட்டு வரும் டிக்டாக், பலபேருக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த வந்ததா? சமூக சீர்கேடுக்கு புதிய அடித்தளத்தை போட்டுள்ளதா? என்ற ஆதங்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
Samayam Tamil youth dies after diving on stone bareilly


உத்தரப் பிரதேச மாநிலம் பரேலிபரேலிதொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் முர்ஷீத் அகமது (24). எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்தான் குடும்பத்தில் இளைய மகன். இந்நிலையில், முர்ஷீத்க்கு தெற்கு ஆசியாவில் வேலை கிடைத்துள்ளதால் அதற்கான பாஸ் போர்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வேலைக்கு தயாரியுள்ளார்.

ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் பயணம் செய்யமுடியாமல் வேலைக்கு சேரும் நாட்கள் தள்ளிப்போயுள்ளது. தற்போது, 5ம் கட்ட பொதுமுடக்கத்தில் ஏற்பட்டுள்ள தளர்வு காரணமாக முர்ஷீத் மீண்டும் பணிக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த புன்கிழமை அன்று ஷாஜகான்பூர் மாவட்டம் கத்ரா பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு முர்ஷீத் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

முதலிரவுக்கு சென்ற புதுமணப்பெண் பலி..! மனநலம் பாதித்த மாப்பிள்ளை...

அங்கு சென்று குளித்த அவர்கள், டிக்டாக் எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, முர்ஷீத் ஆற்றங்கரைக்கு அருகே இருந்த மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து ஆற்றில் டைவ் அடிப்பதை டிக்டாக்கில் படம் பிடிக்க கூறியுள்ளார். இதையடுத்து அதை படம் பிடிப்பதற்காக அவரது நண்பர்கள் மரத்தின் கீழே கையில் செல்போனுடன் தயாராக இருந்துள்ளனர். அப்போது, மரத்திலிருந்து டைவ் அடித்த முர்ஷீத் தலை பாறையின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை கண்டு பதறிப்போன அவரது நண்பர்கள் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முர்ஷீத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இச்சம்பவம் அறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வழக்கை விபத்தாக பதிவு செய்து, முர்ஷீத்தின் உடலை அவரது குடும்பத்தில் ஒப்படைத்தனர். எளிய குடும்பத்தில் பிறந்து நல்ல வேலை கிடைத்த சூழலில், வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது

அடுத்த செய்தி