ஆப்நகரம்

கணவன் தொழிலில் பிஸி, அடிக்கடி வீட்டுக்கு வரும் வாலிபர், பிள்ளையின் வாக்குமூலம்

சென்னை அருகே கணவனுக்கு தெரியாமல் காதலனுக்கு பணத்தை கொடுத்து நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Dec 2020, 3:15 pm
சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தஸ்லின் (36). இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளான். இந்த நிலையில் இவர்களது மகனுக்கு கடந்த 20 ஆம் தேதி அன்று வீட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
Samayam Tamil woman affair


அப்போது, நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் அன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை காணவில்லை என தஸ்லின் கணவனிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட தஸ்லின், பிறந்த நாள் விழாவுக்கு வந்த தங்களது தங்கச்சியின் கணவர்தான் பணத்தை திருடி சென்றதாகவும், அதை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அதை நம்ப மறுத்த தமீம் அன்சாரி, தனது 8 வயது மகனும் அதற்கு சாட்சி என தெரிந்த பின்னர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்து என்று தமீமின் மகனுடன் போலீசார் கேட்டனர். அதற்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த சிறுவன், தனது அம்மாதான் அப்படி கூற சொன்னார் என்று போலீசில் தெரிவித்தான். அதனால் சந்தேகமடைந்த போலீசார் தஸ்லினை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

'இத வச்சுதான் மகள்களுக்கு திருமணம் நடத்த இருந்தேன்'... குட்டையில் விஷம் வைத்த கொடூரர்கள்

தஸ்லினின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் தஸ்லின் பலமுறை தொடர்பு கொண்டிருந்ததை கண்டு பிடித்தனர். அதை வைத்து விசாரித்ததில், அந்த எண் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் முகமது (38) என்பவரின் எண் என்று தெரிய வந்தது. இதையடுத்து தஸ்லின் மற்றும் ரியாஸ் இருவரையும் ஒன்றாக விசாரித்ததில் தஸ்லின் செய்து வந்த அட்டூழியங்கள் வெளி வந்தன.

அதாவது, தஸ்லினின் கணவர் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இதனால் தனிமையில் இருந்து வந்த தஸ்லினுக்கு முகநூல் மூலமாக ரியாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டதுடன் தமீமின் வீட்டு வந்து கணவன், மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு ரியாஸ் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் ரியாஸுக்கும், தஸ்லினுக்கும் திருமண உறவை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது.

தமீம் வெளியூர் சென்று விடும் நாட்களில் தனிமையில் இருக்கும் தஸ்லினுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்துள்ளார் ரியாஸ். இதனால், பல சந்தர்ப்பங்களில் ரியாஸுக்கு கேட்கலாமலேயே கணவன் சம்பாதித்த பணத்தை வாரி இறைத்துள்ளார். இதில் பணம் மட்டுமில்லாமல், தங்க நாணயங்கள், நகைகளும் அடங்கும்.

இந்நிலைதான் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபாய் 44 லட்சத்தை ரியாஸுக்கு கொடுத்துவிட்டு நாடகமாடியுள்ளார் தஸ்லின். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் இருவரையும் கைது செய்து, ரியாஸிடம் இருந்து ரூபாய் 41 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து தமீமிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி