ஆப்நகரம்

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பர் குத்திக் கொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு...

கோவில்பட்டி அருகே மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கார் டிரைவரை கொலை செய்த கட்டிட தொழிலாளி.

Samayam Tamil 3 Feb 2020, 1:14 pm
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை அன்று அழுகிய நிலையில், வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக செட்டிக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பர் குத்திக் கொலை


இதையடுத்து, கயத்தாறு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து டி.எஸ்.பி.ஜெபராஜ், கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் பத்மவாதி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், கயத்தாறையடுத்த கம்மாப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மில்டன் ராஜ் (35) என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், அமிஷன் (3) என்ற மகனும் உள்ளனர். மேலும் மில்டன் ராஜ் ஆரம்பத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அதிக மது பழக்கம் இருந்த காரணத்தினால் மில்டன்ராஜ்க்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து அவரது மனைவி ராணி மில்டன் ராஜை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

மில்டன் ராஜ் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வதும் எப்போதவது ஊருக்கு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்கிடையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்பவருடன் கட்டடி வேலைக்கு சென்றுள்ளார். விஜயன் கொத்தனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை..! சென்னையில் பயங்கரம்..

இந்நிலையில் கடந்த 25ம் தேதி கம்மப்பட்டி அருகேயுள்ள வெள்ளாளங்கோட்டை கிறிஸ்துவ ஆலய திருவிழாவிற்கு செல்வதாக மில்டன்ராஜ் வீட்டில் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தனியார் தோட்டத்தில் நேற்று மில்டன்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் அவருடைய செல்போனில் கொலை செய்யப்பட்ட அன்று வந்த அழைப்புகளை சோதனை செய்த போது, முதலில் அவரது தாய் அழைப்பும், அதற்கு முன்னதாக கொத்தனார் விஜயன் அழைப்பும் இருந்தது. இதையடுத்து விஜயனை பிடித்து விசாரணை நடத்தியதில் மில்டன்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலத்தில் தானும், மில்டன் ராஜும் ஒரு நாள் மது குடித்த போது, மில்டன்ராஜ் தனது போனில் உள்ள வீடீயோ ஒன்றை விஜயனிடம் காண்பித்துள்ளார். வீடியோவை பார்த்த விஜயனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் தனது மனைவி வெண்ணிலா குளிக்கும் காட்சி இருந்துள்ளது. இதையெடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, பணம் கொடுத்தால் வீடியோ மற்றும் போட்டக்களை அழித்து விடுவதாக தெரிவித்துள்ளார் மில்டன்ராஜ்.

தனக்கு சில நாள்கள் அவகாசம் வேண்டும் என்று விஜயன் கேட்கவும், மில்டன்ராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி விஜயன், மில்டன்ராஜை வேலைக்கு அழைத்து சென்றது மட்டுமின்றி பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆபாச வீடியோ பார்த்தாலும் கைது; அப்படியே இவங்களுக்கும் ஆப்பு - ஏடிஜிபி எச்சரிக்கை!

இதையெடுத்து மில்டன்ராஜ், விஜயன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலை ஒத்தவீடு அருகே சென்றதும் விஜயன் பைக்கினை நிறுத்தியுள்ளார். அப்போது விஜயனின் நண்பர்கள் இருவரும் வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ஸ்குருடிரைவரால் மில்டன்ராஜை குத்தி கொலை செய்து விட்டு , உடலை அருகில் இருந்த தோட்டத்திற்குள் போட்டுவிட்டு, செல்போனில் இருந்த வீடீயோ மற்றும் போட்டோக்களை அழித்து விட்டு தப்பிச்சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து போலீசார் விஜயனை கைது செய்ததோடு அவருக்கு உதவி செய்ததாக கூறப்படும் அவருடைய நண்பர்கள் மதன்,பாலமுருகன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி