ஆப்நகரம்

முகிலனுக்கு எதிராக 500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை!

சூழழியல் ஆர்வலர் முகிலன், அவரது நண்பர் விஸ்வநாதன் ஆகியோர் மீது கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Oct 2019, 8:28 am
ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வன்முறை நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான ஆவணப்படத்தை முகிலன் பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து முகிலனை பல மாதங்கள் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கவேண்டி பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு கோரிக்கைவிடுத்தனர்.
Samayam Tamil Untitled collage (20)


எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசுக்கு எதிராக போராடுவேன்: முகிலன் ஆவேசம்!

இந்நிலையில் முகிலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். ஜூலை 6ஆம் தேதி திருப்பதி இரயில்வே நிலையத்தில் ஆந்திர மாநில போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட்ட முகிலன் பின் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து திருச்சி மத்தியசிறையில் முகிலனை அடைத்தனர். முகிலனுக்கு உடந்தையாக இருந்த விஸ்வநாதன் என்பவரையும் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சிபிசிஐடியினரால் முகிலன், விஸ்வநாதனுக்கு எதிராக 500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4 நாட்களாக தூங்கவிடாமல் துன்புறுத்தல்; முகிலனை சித்ரவதை செய்கிறதா போலீஸ்?

ஐந்து மாதங்களாக காணாமல் போயிருந்த முகிலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட சிறையில் முகிலன் எப்படி இருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீது 500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி