ஆப்நகரம்

ராட்சசன் பட பாணியில் கிண்டல், கேலி... பிரவீனின் உயிரை பறித்ததா மாணவியின் சிரிப்பு.?

திருச்சி அருகே 11 ஆம் வகுப்பு படுத்து வந்த மாணவனை பள்ளி நிர்வாகம் சக மாணவர்கள் முன்பு அவமான படுத்தியதால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 2:42 pm
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி வாசுகி. இந்த தம்பதிக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செல்லம்மாள் சிபிஎஸ்சி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். துரைராஜ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்ததால் பிரவீனை அவரது தாய் வாசுகி கவனித்து வந்தார்.
Samayam Tamil பிரவீனின் உயிரை பறித்த மாணவியின் சிரிப்பு


இந்நிலையில் பிரவீன் அந்த பள்ளியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிந்ததும் அவர்கள் பள்ளிக்கு வந்து பிரவீனை கண்டித்து சென்றுள்ளனர். இதனால் மாணவியும் பிரவீனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மாணவன் எழுதிய தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பு மாணவ, மாணவிகள் முன்னிலையில் அவமான படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சக மாணவி ஒருவர் பிரவீனை பார்த்து கிண்டலாக சிரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் அந்த மாணவியின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார்.

இந்த சம்பவம் பள்ளி நிர்வாகத்திடம் சென்றதும் அவர்கள் பிரவீனை பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்தனர். பின்னர் பத்து நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்ற பிரவீனை பள்ளி நிர்வாகம் நீண்ட நேரம் காத்திருக்க செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. இதனால் மறுநாள் அன்று பிரவீன் தனது தாய் வாசுகியை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

வில்சன் கொலை: திட்டமிட்டு அரங்கேறியது - கேரள போலீஸ்!

ஆனால், அப்போதும் நிர்வாகம் அவர்களை சட்டை செய்யவில்லை. அங்கு நின்றுகொண்டிருந்த பிரவீனை பார்த்த பலரும் கேலியாக சிரித்துள்ளனர் . இந்நிலையில் மாணவனை பள்ளியை விட்டே நீக்கியுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கடும் விரக்தி அடைந்த பிரவீனும், அவரது தாயும் வீட்டிற்கு புறப்பட்டனர். பின்னர் சில நாட்கள் சரிவர சாப்பிடாமலும், எவரிடமும் பேசாமலும் இருந்த பிரவீன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகனின் சடலத்தை கண்டு உடைந்து போன பெற்றோரும், உறவினர்களும் தங்கள் மகனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்கின்றனர். பள்ளி பருவத்தில் மாணவர்கள் தவறு செய்வது இயல்பான ஒன்று. அதை பக்குவமாக எடுத்துரைத்து மாணவர்களை நல்வழி படுத்துவதே உசிதமாகும். அப்படி இல்லாமல் அவமான படுத்தி கடுமையான நடவடிக்கையால் அவர்களை விரக்தி அடைய செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று மாணவனின் பெற்றோர் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி