ஆப்நகரம்

சென்னை: மழைநீர் வடிகாலில் விழுந்து தாய், மகள் பலியான சம்பவம், நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை நொளம்பூர் அருகே மழைநீர் வடிகாலில் விழுந்து பாலியான தாய், மகளின் இழப்பை குறித்து நெடுஞ்சாலை துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Feb 2021, 5:16 pm
சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் கரோலின் பிரிசில்லா (50). மருத்துவரான இவர், தமது மகள் எல்வினுடன் (20) நேற்றிரவு முகப்பேர் பகுதியில் ஷாப்பிங் சென்றுள்ளார். ஷாப்பிங் முடிந்து, தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
Samayam Tamil நொளம்பூர் தாய், மகள் பலி


முகப்பேர் அருகே, இரும்புலியூர்- மதுரவாயல் புறவழிச் சாலை சர்வீஸ் பாதையில் பயணித்து கொண்டிருந்தபோது, அங்கு மழைநீர் நிரம்பி திறந்த நிலையில் இருந்த கால்வாயில் இருசக்கர வாகனம் விழுந்தது.

இந்த விபத்தில் தாயும், மகளும் மூன்றடி ஆழமுள்ள கால்வாய்க்குள் விழுந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்த பார்த்தபோது தாயும், மகளும் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்வாக உரிய விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மூன்று வாரங்களுக்கு பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், இந்த விபத்து தொடர்பாக மாநகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

கிராமிய பாடகி தற்கொலை முடிவு..! அதிர்ச்சியில் ராஜலட்சுமி ரசிகர்கள்...

தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் இரண்டு பேரின் இழப்புக்கு தலா 2 லட்சம் ரூபாயை தமிழக அரசு அறிவித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இழப்பீடு குறித்து பதிலளிக்க நெடுஞ்சாலை துறை பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், வடிகாலை மூடாமல் விட்ட மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கவும், அஜாக்கிரதையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கவும் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு புதிதாக புகார் மனுவை தயார் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தியதுடன், அந்த மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அடுத்த செய்தி