ஆப்நகரம்

மெரினா நடுக்கடலில் தத்தளித்த மாணவர் மீட்பு; வேறொருவரை தேடி சென்றதில் இவர் மீட்கப்பட்டார்

மெரினாவில் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவனை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

Samayam Tamil 5 Jun 2022, 3:36 pm
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாய் சரண் (21). இவர், அங்கு தனியார் கல்லூரியில், பி.டெக் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று, சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு குடும்பத்தோடு பங்கேற்றார்.
Samayam Tamil chennai crime


நிகழ்ச்சி முடிந்த பின்னர், மதியம் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சாய் சரண் சென்றார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி அவர் மாயமானார். தகவல் கிடைத்து, அண்ணா சதுக்கம் போலீசார் தகவலின் பேரில், கடலோர காவல் படை மற்றும் மெரினா மீட்பு குழு ஆகியோர் இரவு முழுவதும் தேடியபோதும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை மெரினா மீட்பு குழுவினர், சாய் சரணை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராட்சத அலையில், வாலிபர் ஒருவர் சிக்கி தத்தளித்து, அவர் உயிருக்கு போராடினார். இதை பார்த்த மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம், கடலில் இறங்கி, அந்த வாலிபரை மீட்டனர்.

38 வயசுதான்... உல்லாச வாழ்க்கை... ஒரு நொடியில் மாறிப்போன 'குடியாத்தம் குயின்' கதை

விசாரணையில் அவர், மாயமான சாய் சரண் இல்லை என தெரியவந்தது. பின், அம்பத்தூர், பட்டரவாக்கம், டி.பி.டி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் பரமசிவம் (20) என்ற கல்லூரி மாணவர் என தெரியவந்தது. பின், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மாயமான சாய் சரண் கதி என்னவென்று தெரியவில்லை.

அடுத்த செய்தி