ஆப்நகரம்

10ஆம் வகுப்பு மாணவிக்கு குறி; குலைநடுங்க வைக்கும் வாக்குமூலம் - சிக்கிய அரசு ஆசிரியர்கள்!

தங்கள் பிள்ளைகளாக கருதி கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்கள் எல்லை மீறி இப்படியொரு மோசமான செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 10 Jan 2020, 12:24 pm
”ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி” என்று பொதுவாக கூறுவதுண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியராக இருந்து கொண்டு மாணவிகளிடையே எல்லை மீறி தவறாக நடந்து கொள்வது எவ்வளவு பெரிய குற்றம்.
Samayam Tamil Arrest


அப்படியொரு சம்பவம் தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள அரசு பள்ளியில் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பள்ளியில் வரலாற்று பாடத்தின் ஆசிரியர்களாக லட்சுமணன்(38), சின்னமுத்து(34) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரூர் பகுதியில் தங்கியுள்ளனர்.

கயிற்றால் கட்டி கிணற்றில் மூழ்கடித்து?- சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்- பெற்றோர் அதிர்ச்சி!

அங்கிருந்து நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். சில சமயங்களில் போதையிலும் பள்ளிக்கு வருவதாக புகார்கள் வந்துள்ளன. இப்பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இரு ஆசிரியர்களும் குறிவைத்துள்ளனர். காதல் கவிதைகள் எழுதி தந்துள்ளனர்.

அந்த மாணவியின் செல்போனிற்கு கவிதைகள், ஆபாச வார்த்தைகள், ஆபாச படங்கள் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த இரு ஆசிரியர்களும் அந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதிகலங்க வைத்த கருக்கலைப்புகள்; சென்னை ஸ்கேன் சென்டருக்கு நேர்ந்த கதி இதுதான்!

இதனால் அவர் கூச்சலிட்டு கொண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழுதபடியே ஓடியுள்ளார். இந்த தகவல் பெற்றோருக்கு தெரியவர ஊர்மக்களுடன் பள்ளி முன்பு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து இரண்டு ஆசிரியர்களிடம் கேட்கையில் அவர்கள் உளறியதாக கூறப்படுகிறது.

உடனே இரு ஆசிரியர்களையும் ஊர் மக்கள் அடி வெளுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். நடந்த சம்பவங்கள் பற்றி விசாரித்து விட்டு, ஆசிரியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விபரீத காதல் இதுதான் போல; வால்பாறையில் கேரள மாணவி உடல் - திக் திக் நிகழ்வுகள்!

அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்பு திரண்டு பொதுமக்கள் இரண்டு ஆசிரியர்களையும் தூக்கில் போடுங்க என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்துள்ளார். இதன்பேரில் இரு ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி