ஆப்நகரம்

'நீ லிஸ்ட்லயே இல்லையேப்பா'...! 3 பேரை திருமணம் செய்துகொண்ட பெண்... குழந்தைக்கு அப்பா யார் என குழப்பம்...

இராமநாதபுரம் அருகே 8 மாத குழந்தையை தன்னை கேட்காமல் விற்பனை செய்து விட்டதாக பெண் மீது வாலிபர் அளித்த புகாரை அடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 11 Feb 2020, 8:38 pm
இராமநாதபுரம் மாவட்டம் கோரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 8 மாத குழந்தையை வேறொருவருக்கு விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதையடுத்து அதிகாரிகள் மாலதியை நேரில் விசாரிப்பதற்காக அழைத்தனர்.
Samayam Tamil இராமநாதபுரம் மாவட்டம் 3 பேரை திருமணம் செய்துகொண்ட பெண்


அங்கு அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது '' மாலதி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் கட்டிட வேலைக்காக சென்று வரும் மாலதி அங்கு வேலை பார்த்த வினோத் என்பவருடன் நெருக்கமாகியுள்ளார். இது தெரிந்ததால் முதல் கணவர் மாலதியை விவாகரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து வினோத் மாலதியை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்தில் குடும்பம் நடத்தி வந்தார். சில மாதங்கள் ஆன பின்னர் வினோத் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். இரண்டு மூன்று மாதங்கள் அங்கிருந்து மாலதிக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்த வினோத்தை குறித்த தகவல் ஒரு கட்டத்தில் காணாமல் போயுள்ளது.

இந்த நிலையில் அவர் அங்கேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சரி என்ன செய்ய என்று இருந்த மாலதி மூன்றாவதாக மாற்று திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சமயத்தில்தான் மாலதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 8 மாதம் ஆன நிலையில், இறந்துபோன வினோத்தின் உறவினர்கள் மாலதியிடம் வந்து, அது வினோத் குழந்தை என உரிமை கொண்டாடிவிட்டு குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

சிகிரெட்டால் குடும்பமே சீரழிந்தது... தாய்க்குக் கத்தி குத்து, மகன் தூக்கு!

இந்த சமயத்தில்தான் உத்திரகோசமங்கை பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர், மாலதி தன்னுடைய குழந்தையை விற்பனை செய்துவிட்டதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவரை குறித்து விசாரித்ததில், மாலதி சில மாதங்களுக்கு முன்பு சரத்துடன் நெருக்கமாக இருந்தகாகவும், அதனால் கர்ப்பமான மாலதி பெண் குழந்தையை பெற்றதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தை கேட்ட அதிகாரிகள் ஒன்றும் கூற முடியாமல், '' குழந்தை யாருடையது என டிஎன்ஏ பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள நீதிமன்றத்தை அணுகுங்கள், அதுவரை குழந்தை காப்பகத்தில் இருக்கும் என கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி