ஆப்நகரம்

அண்ணாமலையை லைக்கிய நெல்லை பெண் டிஎஸ்பி..? ட்விட்டரில் புதிய சர்ச்சை

நெல்லை பெண் டிஎஸ்பி ஒருவரது அக்கவுண்ட் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக ட்விட்டரில் சர்ச்சையாகியுள்ளது.

Samayam Tamil 19 Feb 2022, 12:14 pm
நெல்லையில் பாஜகவுக்கு ஆதரவாக காவல்துறையில் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரி சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக இயங்கி வந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக ட்விட்டரில் 'இலக்கியா தர்மா' என்ற பெயரில் ஒரு அக்கவுண்ட் இருந்துள்ளது. அந்த பெண் டிஎஸ்பி அக்கவுண்டில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஆகியோரின் போஸ்டுகளுக்கு தொடர்ந்து லைக்ஸ்கள் போடப்பட்டு வந்துள்ளன.
Samayam Tamil file pic
annamalai and nellai dsp


மேலும், அண்ணாமலையின் சமீபத்திய ப்ரொபைல் போட்டோவுக்கும் அவர் லைக் போட்டுள்ளார்.அதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுத்து தமிழக காவல்துறைக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.


பொது பணியில் உள்ள ஒரு காவல் அதிகாரி ஒரு கட்சிக்கும், அந்த கட்சிக்காரர்கள் தமிழக அரசுக்கு எதிராக போடும் போஸ்டுகளை லைக் செய்து வந்துள்ள விஷயம் தற்போது பூதாகரமாகியுள்ளது. ட்விட்டரில் இதற்கு தொடர் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் இலக்கியா தர்மா என்ற அக்கவுண்ட் இப்போது டெலிட் ஆகிவிட்டது.

பல நாள் இரவு பூஜை... திருவள்ளூர் மாணவி தற்கொலை... சாமியார் ஓட்டம்..!

எனவே, அந்த அக்கவுண்ட் உண்மையிலேயே பெண் டிஎஸ்பியுடைதுதானா? அப்படி இல்லையென்றால் சர்ச்சையான பின்னர் எதற்காக டெலிட் செய்ய வேண்டும்? என்பதை ஆராய்ந்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி