ஆப்நகரம்

மாஸ்க் இல்ல, சரீர இடைவெளி இல்ல... அபராதம் கட்டிய மணமக்கள் வீட்டார்..!

திருமண மண்டபங்களில் சமூக இடைவெளிகளை பிடிக்காமலும் முகக்கவசம் அணியாமல் இருந்த மூன்று மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை.

Samayam Tamil 25 Apr 2021, 9:28 pm
கொரனோ இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
Samayam Tamil திருமண நிகழ்ச்சி


அதன்படி, இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் திருவகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமகன், மணமகள் உட்பட ஒருவர்கூட முகக்கவசம் அணியாமலும் அதிக அளவில் கூட்டத்தை கூட்டி சமூக இடைவெளி கடைபிடிக்காமல் திருமண விழாவை நடத்தினர்.


சென்னையில் பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் உட்பட 4 பேர் கைது..!

இதனை அறிந்த அப்பகுதிக்கு வந்த சூரமங்கலம் பகுதி மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் இருந்ததால் திருமண வீட்டாருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும், இதேபோல மரவனேரி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் ஒருவர் கூட கவசம் அணியாமலும் அதிக அளவில் கூட்டத்தை கூட்டியிருந்தனர். இந்தநிலையில் அங்கும் அஸ்தம்பட்டி பகுதி மாநகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருமண விழாக்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இருந்த மூன்று மண்டபங்களில் மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி