ஆப்நகரம்

இது தமிழ்நாடா? குடிகார நாடா? - இதைக் கேட்டதுக்கு கைது செய்த போலீஸ்; ஆப்பு அடித்த நீதிபதி!

மதுவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞரைக் கைது செய்த விவகாரத்தில், போலீசிற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2019, 4:29 pm
திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் என்னும் இடத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
Samayam Tamil Arrest


மதுவிற்பனையைக் கண்டித்து, இளைஞர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில், ”தமிழ்நாடா? குடிகார நாடா? தமிழக அரசே என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக செல்லப்பாண்டியன் என்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் செல்லப்பாண்டியனை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எதற்காக கைது செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டார்.

அதற்கு, மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர் என்று போலீசார் விளக்கம் அளித்தனர். இதற்கெல்லாம் கைது செய்வீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் போலீசாரைக் கண்டித்தனர். பின்னர் தங்கள் சொந்த ஜாமினில் அந்த இளைஞரை விடுதலை செய்தனர்.

அடுத்த செய்தி