ஆப்நகரம்

விஜய் சேதுபதி குடும்பத்தை பற்றி அவதூறு பதிவு: மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு

விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் பதிவு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 20 Oct 2020, 7:16 pm
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றை 800 என்ற தலைப்பில் படமாக்கப்போவதாகவும் அதில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. சிங்கள ஆதரவாளராக இருந்து ஈழ தமிழர்களை எதிர்த்த முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்ககூடாதென பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் படத்தை கைவிடும்படி முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதியை அறிவுறுத்தினார்.
Samayam Tamil file pic


அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியும் 800 திரைப்படத்தில் இருந்து விலகினார். இருப்பினும், விஜய் சேதுபதிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பாக, விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து ரித்திஷ் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து சர்ச்சையாக பதிவிடப்பட்டது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் குடும்பத்தைப்பற்றி சமூகவலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக பல தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், இது குறித்து பல்லாவரத்தை சேர்ந்த லியோ சிவகுமார் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றம் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

தற்கொலைக்கு முன்பு குளியல், கணவனிடம் ஆசை பேச்சு..! சென்னை இளம்பெண் பரிதாபம்

அதனை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவதூறாக பேசுதல் ஆபாசமான கருத்துக்களை பதிவிடுதல் , தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற மூன்று பிரிவின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி