ஆப்நகரம்

துண்டு, துண்டாக வெட்டி 44 பேரை 120 பிளாஸ்டிக் பைகளில் அடைத்த கொடூரம்- அதிர்ச்சி பின்னணி!

உலகையே உலுக்கிய கொடூர கொலைகளில் ஒன்று, சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 16 Sep 2019, 8:54 am
மெக்சிகோ நாட்டின் மேற்கே ஜாலிஸ்கோ மாகாணம் அமைந்துள்ளது. அங்கு போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்காக பல்வேறு கும்பல்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil Murder


இதன் காரணமாக அவர்களுக்குள் பயங்கர மோதல் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதன் முடிவில் பலர் கொல்லப்படும் நிலையும் உருவாகிறது. தொழில் போட்டியால் ஜாலிஸ்கோ மாகாணம் வன்முறை மாகாணமாக காட்சி அளிக்கிறது.

என்னா அடி; பாலியல் சீண்டலில் சிக்கிய நபரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்!

இந்த நிலையில் தான், உலகையே உலுக்கும் வகையிலான கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. ஜாலிஸ்கோ மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாக குவாடலஜரா விளங்குகிறது.

அங்குள்ள பழைய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த உள்ளூர் மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சினையில் தந்தையை கொன்ற மகன் கைது!

அப்போது கிணற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை எடுத்து சோதித்து பார்க்கையில், மனிதர்களின் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 120 பைகளில் 44 பேரின் உடல் பாகங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சைபர் குற்றங்கள் அதிகமாம்: 4 மணிக்கு அலர்ட்டா இருங்க!

போதைக் கும்பல் மோதலில் இப்படியொரு கொலை அரங்கேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொல்லப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மெக்சிகோவை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி