ஆப்நகரம்

7 ஆண்டு தகாத உறவில் தகராறு... என்ன செஞ்சிருக்காரு பாருங்க...

காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம் கிராமத்தில் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த கிராம மக்கள்.

Samayam Tamil 28 Dec 2021, 3:41 pm
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்விக்கும், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேவ புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil love with Married Woman


இந்நிலையில், இவர்களுக்குள் சில நாட்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இன்று மாமங்கலம் கிராமத்திற்கு வந்த திருநாவுக்கரசு செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டையில் வாக்குவாதம் முற்றி திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வியை கிராம மக்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய திருநாவுக்கரசை கிராம மக்கள் துரத்திப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

10ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை போக்சோவில் கைது - அரியலூர் பரபரப்பு

பின்னர் சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தகாத உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் கழுத்தை அறுத்த காதலனை கட்டி வைத்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

அடுத்த செய்தி