ஆப்நகரம்

சென்னையில் தங்கம் கடத்தல்: சுற்றிவளைத்த அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்திற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 14 Jan 2020, 12:31 pm
அரபு நாடுகளிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும்தான் தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil சென்னையில் தங்கம் கடத்தல்


தொடர்ந்து சோதனையில் பலர் சிக்கிவந்தாலும் கடத்தல் சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

துபாய், அபுதாபி, இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புடைய 1.53 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த சவாஸ்கான் பாரே(37), நாகையைச் சோ்ந்த முகமது ரிபாய்தீன் (25), சென்னையைச் சோ்ந்த சீனி இப்ராஹிம் (49), திருச்சியைச் சோ்ந்த ஹமானுல்லா(40) ஆகிய 4 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பதி கிளப்பில் ஆபாச நடனம்..! 21 இளம் பெண்களிடம் போலீஸ் விசாரனை

சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.14.3 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் கரன்சி சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பணக்கட்டுகளை கைப்பைகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையைச் சோ்ந்த பெண்பயணிகள் சசிகா ரூபினி (49), வசந்தி (49) ஆகிய 2 பேரை சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் 77.3 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2 பெண்கள் உட்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

ராட்சசன் பட பாணியில் கிண்டல், கேலி... பிரவீனின் உயிரை பறித்ததா மாணவியின் சிரிப்பு.?

அடுத்த செய்தி