ஆப்நகரம்

தாத்ரா - நாகர் ஹவேலி சுயேச்சை எம்பி மர்ம மரணம்..! மும்பையில் பரபரப்பு

தாத்ரா - நாகர் ஹவேலி எம்பி மோகன் டெல்கர் மர்மமான முறையில் மும்பை ஹோட்டலில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Feb 2021, 6:55 pm
இந்திய யூனியன் பிரதேசத்தின் தாத்ரா - நாகர் ஹவேலி லோக்சபா எம்பியாக இருந்தவர் மோகன் டெல்கர் (58). பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மரைன் டிரைவில் உள்ள சீ கிரீன் ஹோட்டல் அறையில் இன்று சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Samayam Tamil மோகன் டெல்கர்


அங்கு விரைந்த போலீசார் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் உள்ள அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மோகன் டெல்கர் சடலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் சஞ்சிபாய் டெல்கர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எப்படி தற்கொலை செய்த்க்கொண்டார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்கின்றனர். மேலும், டெல்கர் இறந்து கிடந்த அறையில் தற்கொலை கடிதம் ஒன்றி சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சிசிடிவி-யில் நோட்டம், மகள்களிடம் அத்துமீறல், டிஎஸ்பி மனைவி பரபரப்பு புகார்..!

58 வயதான மோகன் சஞ்சிபாய் டெல்கர் ஏழு முறை தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியில் லோக்சபா எம்பியாக இருந்து வந்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸை விட்டு வெளியேறியவர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அடுத்த செய்தி