ஆப்நகரம்

நீர்வீழ்ச்சியில் துணை வட்டாட்சியர் வழுக்கி விழுந்து பலி - கள்ளக்குறிச்சியில் சோகம்

கல்வராயன்மலையில் கவியம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்ற திருக்கோவிலூர் துணை வட்டாட்சியர் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது தவறி விழுந்து உயிரிழப்பு.

Samayam Tamil 27 Jun 2022, 4:51 pm
கவியம் நீர்வீழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் இருந்து தொரடிப்பட்டு கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதிகள் ஏதும் இல்லாததால் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தான் நீர்வீழ்ச்சியில் குளிக்கவே அல்லது பார்க்கவே செல்ல வேண்டும்.
Samayam Tamil sub tahsildar death
sub tahsildar death


இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் அளவுக்கு தற்போது தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனை அடுத்து நேற்று (ஞாயிற்று கிழமை) விடுமுறை நாள் என்பதால் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர் வயது 33 என்பவர் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று மதியம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த சுந்தரம் தலையில் பலத்த காயம் அடிபட்டு உயிரிழந்தார். உடனடியாக சுந்தரத்தின் நண்பர்கள் கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் கரியலூர் போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அடர்ந்த தோப்பில் இரட்டைக்கொலை... காட்டி கொடுத்த மங்கி குல்லா... பகீர் தரும் க்ரைம் சீன்..!

சாலை வசதிகள் சரியாக இல்லாததாலும், தொலைதொடர்பு இல்லாததாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு பின்பு சுந்தர் பின் உடலை கைப்பற்றிய தீயணைப்புத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாளில் கல்வராயன் மலைக்கு குளிக்கச் சென்று துணை வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் இறந்த சம்பவம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி