ஆப்நகரம்

'வாபஸ் வாங்கு இல்லாட்டி விவாகரத்து'... திமுகவினரின் மிரட்டலால் கொதிக்கும் நாதக பெண் வேட்பாளர்..!

வாணியம்பாடியில் மருத்துவமனையில் இருந்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் பெற திமுகவினர் கொடுத்த நெருக்கடியால் ஏற்பட்ட விபரீதம்.

Samayam Tamil 7 Feb 2022, 7:48 pm
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 வது வார்டில் (பெரிய பேட்டை பகுதியில்) நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் சோனியா என்பவர் போட்டியிடவுள்ளார். இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவர் செல்வமணியுடன் கடந்த 4 நாட்களாக இருந்து வந்துள்ளார்.
Samayam Tamil ntk woman candidate


இந்த நிலையில், சோனியாவின் வேட்பு மனுவை வாபஸ் பெற அவரது கணவர் செல்வமணி மற்றும் கணவரின் அண்ணன் கானா முருகன் மூலம் திமுகவை சேர்ந்த மா.ப. சாரதி மற்றும் திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொல்லு என்கின்ற வெங்கடேசன் ஆகியோர் செல்போன் மூலம் கணவர் செல்வமணிக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவர் செல்வமணி வாடகை கார் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த சோனியாவை 'நீ மனுவை வாபஸ் பெறவில்லை என்றால் என்னுடன் வாழ முடியாது என கட்டாய படுத்தி வேலூர் மருத்துவமனையில் இருந்து செல்வமணியின் அண்ணன் கான முருகனுடன் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு காரில் அழைத்து வந்துள்ளார்.

20 பெண்கள்... ஒத்த ஆளு... வைரலாகும் பெங்களூரு புடவை ரவுடிகள் வீடியோ!

அப்போது, நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் காரை முற்றுகையிட்டு அவரை சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அங்கிருந்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜிடம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா செல்போன் மூலம் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அதேபோல் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தார். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி