ஆப்நகரம்

ஐதராபாத்தில் மின்தூக்கி சந்துக்குள் விழுந்து 67 வயதுப் பெண் பலி

ஐதராபாத்தில் மின்தூக்கி சந்துக்குள் விழுந்து 67 வயதுப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Samayam Tamil 9 May 2019, 8:45 pm
ஐதராபாத்தில் மின்தூக்கி சந்துக்குள் விழுந்து 67 வயதுப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Samayam Tamil Capture


ஐதராபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார் 67 வயது பெண். திருமணம் கட்டத்தின் மேல் தளத்தில் நடந்தது. பழைய கட்டடமான அதில் பழைய மாடல் மின் தூக்கி பயன்படுத்தப்பட்டது.

தற்போது வரும் சென்சார் பொருத்தப்பட்ட நவீன மின் தூக்கிகளில் கதவுகள் தானாக திறந்து மூடும் வசதி உள்ளது.

ஆனால் பழைய மாடல் மின் தூக்கிகளில் இரண்டு கிரில் கம்பிகளை இழுத்து தள்ளி மின் தூக்கிக்குள் செல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிவர்.
இதுபோன்ற மின் தூக்கிகளில் பாதுகாப்புக்கு லிப்ட் ஆபரேட்டர் உள்ளே இருப்பார்.

ஆனால் அந்த அடுக்குமாடி கட்டடத்தில் ஆபரேட்டர் இல்லை. திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பெண் கிரில் கதவை திறந்து மின் தூக்கி தான் இருக்கும் தளத்துக்கு வந்துவிட்டதாக நினைத்து காலை உள்ளே வைத்துள்ளார்.

உடனே மின் தூக்கி சந்துக்குள் விழுந்து உடனடியாக மரணம் அடைந்தார். கட்டட நிர்வாகிகளின் அலட்சியத்தால் அவரது மரணம் ஏற்பட்டது என மறைந்த பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி