ஆப்நகரம்

தலை சுத்தும் பின்னணி... மலேசிய பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு நெல்லை வந்த பொறியாளர் கைது!

மலேசிய இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய நிலையில் தாயகம் திரும்பிய நெல்லை பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 7 May 2022, 5:55 pm
மலேசியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு சில காலம் அவரோடு குடும்பம் நடத்தி அவரை கர்ப்பமாக்கிய நிலையில் மலேசியாவில் விட்டுவிட்டு தாயகம் திரும்பிய திருநெல்வேலியைச் சேர்ந்த இம்ரான் என்ற பொறியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் மலேசியாவில் இருந்து திருநெல்வேலி வந்த இளம் பெண் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
Samayam Tamil nellai crime news


மலேசியா நாட்டைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகளும் பொறியியல் பட்டதாரியமான பெண் கவிதா (33). இவருக்கும் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இம்ரான் என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் நட்பு ஏற்பட்டு நண்பர்கள் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், இம்ரான் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றதாக தெரிகிறது. சமூக வலைதளம் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். திருநெல்வேலிக்கு வந்தால் திருமணம் செய்து கொள்ள தயார் என இம்ரான் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது மதத்தை மறைத்து வேறு மதத்தை சேர்ந்தவர் என்ற அடையாளத்தில் கவிதாவுடன் இம்ரான் பழகி வந்துள்ளார்

சில காலம் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் திருநெல்வேலி வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணம் நடந்துள்ளது. இம்ரான் தனது மதத்தை மறைத்து இந்து முறைப்படி திருமணம் செய்ததாக தெரிகிறது. திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி நிமித்தமாக துபாய் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். துபாய் செல்லும் முன் கவிதாவிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. துபாய்க்கு சென்ற இம்ரான் தனது மனைவியிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

'சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்'... விஜே சித்ரா பற்றி நடிகை சொன்ன ரகசியம்...

இதனிடையே கவிதா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பிணியான மனைவி நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் அவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் தப்பித்து வந்துள்ளார். மேலும், கவிதாவை இங்கிருந்து சென்று விட வேண்டும் எனவும் இம்ரான் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக கவிதா மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தார் . இந்த நிலையில் காவல்துறையினர் இம்ரான் விசாரணைக்கு அழைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை அறிந்த நிலையில் இம்ரானை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையயங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி