ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மியால் திருச்சி மாணவர் தற்கொலை... முடிவு கட்டப்படுமா?

திருச்சி அருகே ஆன்லைன் ரம்மியால் இன்ஜினியரிங் மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Oct 2022, 4:32 pm
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil online rummy


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவன் செலவுக்கு பணமின்றி கடந்த 4 ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிய கல்லூரி சந்தோஷ் , அனைத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் தனது செல்போனில் தற்கொலை செய்துகொள்ளபோவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி கழுத்தறுத்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜியனிரிங் படிக்கும் கல்லூரி மாணவன் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி, விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 -ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி