ஆப்நகரம்

மேட்ரிமோனியில் சூழ்ச்சி... சேலை கட்டிய பெண்களுக்கு குறி... செல்பி புள்ளைங்க உஷார்..!

முகவரியற்ற பெண்களின் புகைப்படங்களை காட்டி மேட்ரிமோனியில் பணம் மோசடி செய்ததாக சேலத்தில் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 15 Jan 2020, 4:47 pm
கல்யாணத்துக்கு வரன் பார்க்க அநேக குடும்பங்கள் தற்போது நாடி செல்வது மேட்ரிமோனி இணையை தளங்களைத்தான். மணமக்களின் படிப்பு, தகுதி, சமூகம், மதம், வயது என அனைத்தும் பொருந்தும் வகையில் சத்தமின்றி வரன் தேடி திருமணத்தை முடிப்பதில் இந்த மேட்ரி மோனிக்கல் பயனுள்ளவையாக உள்ளன.
Samayam Tamil சேலத்தில் மேட்ரிமோனியில் சூழ்ச்சி


ஆனால், இதிலும் போலியாக இணையதளங்கள் இயங்குவதாக நீண்ட நாட்களாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சிவதாபுரத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனின் திருமணத்திற்காக லட்சுமி மேட்ரிமோனி இணையதளத்தை அணுகியுள்ளார்.

அதில் அவரது மகனின் விவரங்களை செல்போன் எண்ணுடன் சேர்த்து பதிவு செய்தார். பின்னர் அவருடைய வாட்சப்பிற்கு நிறைய இளம்பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்தது ஜெய்சங்கரின் குடும்பம்.

எவ்வளோ சொல்லியும் கேட்கல... கையில் துப்பாக்கியுடன் டிக் டாக்... டமால் என்று கேட்ட சத்தம்..!

பெண்ணை குறித்து அவருடைய பெற்றோரிடம் பேச வேண்டுமானால் எங்களது வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த இணையதளத்தை நடத்தி வருபவர்கள் கேட்டுள்ளனர். ஜெய்சங்கரும் பணத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து வாட்சப்பில் அனுப்பப்பட்டிருந்த பெண்களின் புகைப்படங்களை ஜெய்சங்கரின் மகன் முகநூலில் முகவரி அற்று பகிரப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சையடைந்தார்.

பின்னர் இதுகுறித்து விசாரிக்க ஜெய்சங்கர் லட்சுமி மேட்ரி மோனி இணையதள எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. பிறகு ஏமார்ந்து விட்டோம் என்பதை அறிந்துகொண்ட ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி