ஆப்நகரம்

வண்டலூர் அருகே பதவியேற்பின் போது பிரபல ரவுடியின் மனைவி கைது..!

சென்னை அருகே வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல ரவுடியின் மனைவி கஞ்சா வழக்கில் கைது

Samayam Tamil 21 Oct 2021, 2:38 pm
சென்னை பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியின் 9 ஆவது வார்டு உறுப்பினராக விஜயலட்சுமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார். நெடுங்குன்றம் சூர்யா மீது கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil surya wife vijayalakshmi arerst


தற்போது சிறையில் உள்ள சூர்யா அங்கிருந்துகொண்டே தனது மனைவிக்கு எதிராக யாரும் போட்டியிடக்கூடாது என்றும் துணை தலைவர் பதவி விஜயலட்சுமிக்கே கிடைக்க வேண்டும் என்றும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வார்டு உறுப்பினராக நேற்று விஜயலட்சுமி பதவியேற்கும் போது அங்கு அந்த போலீசார் கஞ்சா வழக்கில் அவரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஜயலட்சுமி கஞ்சா கடத்தி அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததால் கைது செய்துள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.

தூது போகாததால் சித்திரவதை, 17 வயது சிறுமி தற்கொலையால் அரியலூரில் பரபரப்பு..!

கடந்த 2020 இல் மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நெடுங்குன்றம் பகுதியில் பாஜக நடத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமை தாங்கினார். அப்போது,

ரவுடியு சூர்யாவும் அவரது சில கூட்டாளிகளும் கட்சியில் இணைய வந்திருப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதனையடுத்து அவர்களை பிடிப்பதற்காக போலீசார் ரகசியமாக நோட்டம் பார்த்தனர். அதில் 6 பேர் பிடிபட்ட நிலையில் ரவுடி சூர்யா மட்டும் தப்பி பின்னர் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

அடுத்த செய்தி