ஆப்நகரம்

அசந்த நேரத்தில் கைவரிசை- பெரம்பலூர் விவசாயிகளை அதிரவைத்த வெங்காய திருடர்கள்!

சின்ன வெங்காய மூட்டைகளை அள்ளிச் சென்ற திருடர்கள் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 10:07 am
பருவமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது.
Samayam Tamil Onion


இந்த சூழலில் வெங்காயத்தை திருடும் சம்பவங்கள் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. வட இந்திய மாநிலங்களில் வெங்காய திருட்டு சம்பவங்களை செய்திகளில் அடிக்கடி காண நேர்ந்தது.

8வது மாடி பயங்கரம்; பிள்ளைகள் கொலை, தம்பதி தற்கொலை - விபரீதத்தின் சோகப் பின்னணி!

இந்த சூழலில் தமிழகத்திலும் வெங்காய திருடர்கள் முளைத்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால் கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். அப்படியொரு சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் 8,000 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை அறுவடை செய்து காட்டுக் கொட்டகையில் பாதுகாத்து வைப்பது வழக்கம்.

கலி முத்தி தான் போச்சு... சாப்பிட்டதற்கு காசு கேட்ட ஹோட்டல் ஓனர் மீது கொலைவெறி தாக்குதல் !!

இந்நிலையில் கூத்தனூர் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி நடவுப் பணிக்காக 1,500 கிலோ விதை வெங்காயத்தை வாங்கி தோட்டத்தில் வைத்துள்ளார். வழக்கம் போல் காலை எழுந்து வயலுக்கு சென்று பார்த்த போது, 6 மூட்டைகளில் வைத்திருந்த வெங்காயத்தை காணவில்லை.

மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. சுமார் 350 கிலோ வெங்காயம் திருடு போனதாக விவசாயி முத்துகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவி மரணம்: தடயவியல் துறை ஆய்வு சொல்லும் முக்கிய தகவல்!

இதுதொடர்பாக பாடாலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெங்காய திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி